பள்ளிகள் திறப்பு குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன், அமைச்சர் மகேஷ் நேற்று ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி:முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி, அரசுக்கு அறிக்கை அளித்தோம். அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, நவ., 1 முதல் பள்ளிகளை திறந்து, நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து, முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே ஆலோசனை நடத்தப்பட்டது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும். பள்ளிகள் திறப்புக்கு முன், வளாகங்களை சுத்தமாக வைக்க வேண்டும் என, கலெக்டர்கள் வழியே உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வி இணை இயக்குனர்கள், மாவட்டங்களுக்கு நேரில் சென்று கண்காணிப்பு பணி மேற்கொள்வர். பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சிகள் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE