கணக்கு மற்றும் கோடிங் கற்பிக்கும் இணைய வழி நேரலை வகுப்புகளை நடத்தும் தனியார் நிறுவனம், கள ஆய்வுகள் மேற்கொள்ளும் மற்றொரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து, குழந்தைகள் கற்றல் குறித்த ஆய்வு மேற்கொண்டன. இந்த ஆய்வில் பெற்றோரிடம் இருந்து பெற்ற கருத்துகளின்படி கடந்த 18 மாதங்களில் சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு கணக்கு கற்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கல்வி கற்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழப்புக்கு முக்கிய காரணம் கணக்கின் மீதுள்ள பதற்றம்தான் என்று 43 சதவீத பெற்றோர் நினைக்கின்றனர்.
அதேநேரம், இந்த கொரோனா தொற்று காலத்தில் தங்களின் குழந்தைகளுக்கு கணக்கு பாட கருத்துகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக 38 சதவீத பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கல்வியில் நிலவும் கடும் போட்டி மற்றும் சக மாணவர்களுக்கு இடையே உள்ள அழுத்தம் ஆகிய இரண்டுமே இந்திய குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கும் முக்கிய காரணங்களாக உள்ளன. அதற்கு, சென்னையும் விதிவிலக்கல்ல. தனியார் நிறுவனங்கள் சென்னையில் மேற்கொண்ட ஆய்வில் பங்கேற்ற பெற்றோரில் 10 ல் 3 பேர், தங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கணக்கு பாடம் கற்பதில் உள்ள குறைகளை ஈடுசெய்யும் வகையில், உரையாடலுடன் கூடிய காணொலிக் கல்வி, விளையாட்டுகளின் மூலம் கற்றல், மாணவர்கள் தாங்களே செய்முறைகள் மூலம் கற்றல் போன்ற வாய்ப்புகளை அளிக்கின்ற பள்ளிகளையோ அல்லது இணைய வழி கல்வி தொழில்நுட்ப தளங்களையோ நாடிச் செல்வதற்கு இதுவே காரணம் என்று 60 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர். அப்படிப்பட்ட பள்ளிகள் மற்றும் இணைய தளங்கள் வழங்கும் பயிற்சிப் பாடங்கள் பயனுள்ளதாக இருப்பதாக 45 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகள் பாடக் கருத்துகளை தெளிவாக கற்றுக் கொள்வதற்கு வசதியாக இணைய வழி கல்வி கற்பிக்கும் தளங்கள் பெரிய அளவில் உதவியாக இருப்பதாக 52 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதே கருத்தை சென்னையை சேர்ந்த 51 சதவீத பெற்றோரும், மும்பையை சேர்ந்த 58 சதவீத பெற்றோரும் தெரிவித்துள்ளனர். உரையாடலுடன் கூடிய இணைய வழி கற்பித்தல் முறை அதிக பயனளிப்பதாக சென்னையை சேர்ந்த பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
சென்னையை பொறுத்தவரையில் 45 சதவீதம் பேர் கூறும்போது, இணைய வழிக் கல்வியை பதிவு செய்யும் வசதியை வழங்க வேண்டும் என்றும்,சந்தேகங்களை தீர்த்து வைக்கும் வகுப்புகள் வேண்டும் என்று 44 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். இணைய வழி மூலம் கல்வி கற்பிக்கும் நிறுவனங்கள் அதிக அளவில் இருப்பதால், தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க நேரம் ஒதுக்குவதில் இருந்த அழுத்தம் குறைந்துள்ளதாக 10 ல் 2 பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE