பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சங்கங்களை, சென்னை டி.பி.ஐ., வளாகத்திற்கு அழைத்து, நேற்று முன்தினம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார். இதில் 120க்கும் மேற்பட்ட சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை கூட்டம் நடந்தது. அமைச்சர் மகேஷ், உணவு இடைவேளையை தவிர மீதமுள்ள நேரத்தில் மேடையில் அமர்ந்து, சங்க பிரதிநிதிகளின் கருத்துகளை கவனித்து கேட்டார்.இந்த கூட்டத்தில், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளுக்கு, 'மைக்' வழங்கும் ஒருங்கிணைப்பு பணியில் இருந்த அலுவலக ஊழியர் ஒருவர், திடீரென மைக்கை பிடித்து ஆசிரியர்களை பற்றி பல்வேறு குறைகளை தெரிவித்தார்.
'ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், அலுவலகத்தில் உள்ள பணியாளர்களை அவமதிக்கின்றனர். குறிப்பாக பெண் ஊழியர்களை அவமதிக்கின்றனர்' என குற்றம் சாட்டினார்.மேலும், 'அலுவலக பணியாளர்களை ஆசிரியர்கள் மதிக்க வேண்டும். அவர்களும், உங்களை போன்ற ஊழியர்கள் தான் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்' என்றார். இதைக் கேட்ட ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன், 'ஆசிரியர்களை பற்றி பொதுவாக தரக்குறைவாக பேசாதீர்கள். 'கல்வி அலுவலகங்களுக்கு வரும் ஆசிரியர்கள், எப்படி அவமதிப்புக்கு ஆளாகின்றனர் என்பதை நாங்கள் சொல்ல வேண்டியிருக்கும்' என்றார்.இதையடுத்து, 'தனிப்பட்ட முறையில் எந்த பிரிவையும், யாரையும் குறை சொல்ல வேண்டாம்' என அதிகாரிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்தது.
source
https://www.dinamalar.com/
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE