பிள்ளையாரை வணங்கிச் செயலைத் தொடங்கினால் தன்னம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்பார்த்த பலனுடன் செவ்வனே செய்து முடிக்கலாம் என்பது நம்பிக்கை. இந்த விநாயார் சதுர்த்தி தினத்தில் விநாயகர் வழிபாடு தமிழகத்தில் தோன்றிய வரலாறு தெரிந்து கொள்வதோடு அதன் தோற்ற விளக்கத்தை அறிந்து கொள்வோம்.
சிறுத்தொண்டர் எனும் பரஞ்சோதியோர் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவனாகச் சென்று சாளுக்கிய மன்னர் ஆண்டு வந்த வாதாபி எனும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து திருச்செங்காட்டங்குடியில் நிறுவி வழிபட்டார். அதற்கு வாதாபி கணபதி என்று பெயர்.
கி.மு 3ம் நூற்றாண்டிலிருந்து கிபி 2ம் நூற்றாண்டு வரை சங்ககால தமிழ் இலக்கியம், கல்வெட்டு, அகழ்வாய்வு போன்றவற்றில் கணபதி வழிபாடு இருந்ததாக குறிப்பிடப்படவில்லை.
அதே சமயம் கிபி 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்து கல்வெட்டில் விநாயகர் சிலை வழிபாடு குறித்து திண்டிவனத்தருகே, ஆலகிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விநாயகர் திருவுருவம் எப்படிப்பட்டது, ஒவ்வொரு உறுப்பின் விளக்கம்
திருவடி
அதே சமயம் கிபி 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்து கல்வெட்டில் விநாயகர் சிலை வழிபாடு குறித்து திண்டிவனத்தருகே, ஆலகிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விநாயகர் திருவுருவம் எப்படிப்பட்டது, ஒவ்வொரு உறுப்பின் விளக்கம்
திருவடி
விநாயகரின் திருவடிகள் ஞானத்தைத் தரக்கூடியது. ஒருவரின் ஞானம் இறைவனை ஆன்மாவில் பொருத்தி நின்று வழிபட, துன்பங்களை நீக்கி இன்பத்தை அளிப்பதாகும்.
பெருவயிறு
ஆகாயம் எல்லா பொருட்களையும், தன்னகத்தே உண்டாக்கவும், ஒடுக்கவும், இடந்தந்து இருக்கும் விசாலமானது. அதே போல விநாயகரின் பெருவயிறு ஆகாயம் போல எல்லா உயிரினங்களையும் தன்னுள் அடங்கியிருக்கக்கூடியதாகும்.
ஐந்துகரங்கள்
கணபதிக்கு ஐந்து கரங்கள் உள்ளன. ஒரு கையில் பாசத்தை ஏந்தியுள்ளார். அது படைத்தலைக் குறிக்கிறது. அதாவது இவரே பிரம்மாவாகிறார்.
அவர் ஏந்தியுள்ள தந்தம் காத்தலைக் குறிக்கிறது. அதனால் இவரே மகாவிஷ்ணு ஆகிறார்.
துதிக்கை பக்தர்களுக்கு அருள் எனும் அற்புத அனுக்கிரகத்தை அளிக்கக்கூடியது.
ஒரு கையில் இவர் அங்குசம் ஏந்தியுள்ள. இது அழித்தலைக் குறிக்கிறது. அதனால் இவரே ஈசன் ஆகிறார்.
மோதகம் ஏந்தியுள கை அருளைக் குறிக்கிறது. அதாவது இவரே சர்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்.
கொம்புகள்
வியாச முனிவர் சொல்ல, சொல்ல மகாபாரத கதையை விநாயகர் எழுதினார். அப்போது எழுத்தாணி உடையவே, தன்னுடைய தந்தம் எனும் கொம்பை ஒடித்து எழுதினார்.
அதாவது வெளித்தோற்றத்தை விட அறிவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், என்பதை உணர்த்துவதாக இதைக் குறிப்பிடுகின்றனர்.
தாழ் செவி
தாழ் செவி என்றால் பெரிய காதுகள். விநாயகருக்கு முறம் போன்ற பெரிய காதுகள் உள்ளன. அதாவது பேசுவதை விட அதிகம் கேட்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகவும். அப்படி செவியில் விழும் செய்திகளைச் சலித்து நல்லனவற்றை மட்டும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE