📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚
💢📚சென்னை : 'காய்ச்சல், வாந்தி, பேதி உள்ளிட்ட கொரோனா அறிகுறி இருந்தால், பள்ளிகளுக்கு வர வேண்டாம்' என, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
📚தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து விட்ட நிலையில், ஐந்து மாத இடைவெளிக்கு பின், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன.பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் துவங்கி உள்ளன. கல்லுாரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
📚பள்ளி திறந்த முதல் நாளிலேயே, கடலுாரில் பணிக்கு வந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல, நாமக்கல் மாவட்டத்தில், 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் தரப்பில் வழங்கப்பட்டுள்ள புதிய அறிவுரை
📚காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்; அருகில் உள்ள மருத்துவ மையங்களில் பரிசோதனை செய்து கொள்ளும்படி, அவர்களை அறிவுறுத்த வேண்டும். அதன்பின், தொற்று இல்லை என்று தெரிந்து உடல் நலம் தேறிய பின் பள்ளிக்கு வந்தால் போதும். மாணவர்களை பொறுத்தவரை பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE