இந்தியாவில் ஆன்லைன் கல்வி குறித்து எடுக்கப்பட்ட ஆய்வு முடிவு அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் உள்ளது
ஹைலைட்ஸ்:
கிராமப்புற பகுதிகளில் 37 சதவீத குழந்தைகள் படிப்பதில்லை
வெறும் 8 சதவீதம் குழந்தைகள் மட்டுமே ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்கிறார்கள்
கொரோனா காலம் என்பதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே படித்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் இவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்புகளுக்கு செல்போன், இன்டர்நெட் இணைப்பு ஆகியவை தேவை என்பதால் பல மாணவர்களால் இந்த வகுப்புகளை கவனிக்க முடிவதில்லை.
இந்நிலையில் ஆன்லைனில் வகுப்புகள் குறித்து, ஸ்கூல் எனப்படும் பள்ளி குழந்தைகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் கற்றல் என்ற அமைப்பு ஓர் ஆய்வு நடத்தியது. அசாம், பீகார், சண்டிகர், டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழகம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஆய்வு நடத்தப்பட்டது. கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதை அடுத்து அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை அறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இது குறித்த முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் 48 சதவீதம் குழந்தைகளுக்கு சில வார்த்தைகளுக்கு மேல் படிக்கத் தெரியவில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஒரு லெவலும், 6ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இன்னொரு லெவலும் ஆய்வு பிரித்தெடுக்கப்பட்டது.
கிராமப்புறங்களில் 28 சதவீதம் பேர் முறையாக படித்து வருகின்றனர். அது போல் 37 சதவீதம் பேர் ஆன்லைன் வகுப்புகளையும் படிப்பதில்லை. நகர்ப்புறங்களில் 31 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 15 சதவீதம் பேரும் சரியாக ஆன்லைனில் படித்து வருகிறார்கள். தங்கள் குழந்தைகளுக்கு எழுதும் திறனும் படிக்கும் திறனும் இந்த ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதால் போய் விட்டதாக பெற்றோர் கருதி விரைவில் பள்ளிகள் திறக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 24 மற்றும் 8 சதவீதம் பேர் ஆன்லைனில் தினந்தோறும் தவறாமல் படித்து வருகின்றனர். ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தால் நிறைய பேரால் படிக்க முடியவில்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
நகர்ப்புறங்களில் 30 சதவீதம் பேரிடமும், கிராமப்புறங்களில் 36 சதவீதம் பேரிடமும் செல்போன் இல்லை. அப்படியே செல்போன் இருந்தாலும் இன்டர்நெட் இணைப்பு சரி வர கிடைக்காமல் உள்ளது. அது போல் இணையதளத்திற்கு பண வசதி இல்லாமல் நகர்ப்புறங்களில் 9 சதவீதம் பேரும் கிராமப்புறங்களில் 6 சதவீதம் பேரும் உள்ளனர்.
நகர்ப்புறங்களில் 51 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 58 சதவீதம் பேரும் தினந்தோறும் தங்கள் ஆசிரியர்களை பார்க்கவில்லை என்பதையும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆசிரியருக்கும் மாணவருக்குமான ஒரு பாண்டிங் என்பதே இந்த ஆன்லைன் வகுப்பில் இல்லாமல் போயுள்ளது. பள்ளிகள் மூடியதால் சத்துணவு நிறுத்தப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள எஸ்.டி., எஸ்.சி., பிரிவினரில் 4 சதவீதம் பேர் மட்டுமே ஆன்லைன் வழக்கமாக மூலம் படித்து வருகின்றனர். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரில் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என 98 சதவீத பெற்றோர்கள் விரும்புகின்றனர்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE