திமுக அரசு பொறுப்பேற்ற பின் மாதம் தோறும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. இதனால் புதிய ரேஷன் கார்டுகள் கோரி விண்ணப்பங்கள் குவிந்து கொண்டே வருகிறது. குடும்பத்தில் திருமணமான பலரும் தங்களை ரேஷன் கார்டில் இருந்து நீக்கி புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இனால் ஒரு நபர் ரேஷன் எண்ணிக்கை தற்போது பெருமளவில் அதிகரித்துளள்து.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது ரூ.1000 உரிமை தொகை வழங்குவதற்கு தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இதனால் தகுதி வாய்ந்த ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில் போலியான கார்டுகள் மற்றும் நீண்ட நாட்களாக ரேஷன் வாங்காத கார்டுகள் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதனால் ஒரு நபர் ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு நபர் ரேஷன் கார்டுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதனால் அந்த கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவதில் சிக்கல்கள் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் ரேஷன் ஊழியர்கள் ஒரு நபர் கார்டுக்கு பொருட்கள் வழங்காமல் அவர்களை திருப்பி அனுப்புகின்றனர். இது குறித்து கேள்வி கேட்டால் அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை என்று சொல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
எனவே ஒரு நபர் ரேஷன் கார்டு குறித்து தமிழக அரசு தெளிவான முடிவை விரைவில் அறிவிக்க வேண்டுமென்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் எந்தவித சிக்கல் இல்லாமல் பொருட்கள் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE