இதன்படி, ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணாக்கர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று, அங்குள்ள மாணாக்கர்களை ஒருங்கிணைத்து, தினசரி 2 மணி நேரம் பாடங்கள் நடத்தவும், கற்றல் குறைபாட்டை போக்க பல்வேறு செயல்முறை நிகழ்ச்சிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட உள்ளனர்.
ஆசிரியர்கள் பணி செய்வதை தொடக்கக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அத்துடன், வீதி வகுப்பறை என்ற பெயரில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்தத திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக அக்டோபர் மாதமே வீடு தேடிச் சென்று பாடம் நடத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளிகள் திறந்த பிறகும் மாலை நேரத்தில் மாணவர்களின் வசிப்பிடம் சென்று பாடம் நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE