அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால், ஆண்டுக்கு அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த கல்வி உதவித்தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர், சென்னை சேப்பாக்கம் எழிலகம் இணைப்பு கட்டடத்தில் உள்ள, பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தில் விண்ணப்பம் பெறலாம்.
மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலும் பெறலாம்.மேலும், tngovtiitscholarship@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரி வழியாக கோரி, விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை மாணவர்கள் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்கள் சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை, நவ., 30க்குள் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
source
https://www.dinamalar.com
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE