தள்ளுபடி
முதலில் தள்ளுபடி விற்பனையை ஆரம்பிக்கும் நிறுவனங்கள் அதிக லாபம் பெற வாய்ப்புகள் இருப்பதை கருத்தில் கொண்டே இரண்டு நிறுவனங்களும் ஒரே நேரத்தில் போட்டிபோட்டு விற்பனை செய்ய முடிவு எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி இ.காமர்ஸ் நிறுவனங்களான பிளிப் கார்ட் மற்றும் அமேசான் ஆகியவை ஆண்டுதோறும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிகபட்ச தள்ளுபடியில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த ஆண்டு இரு நிறுவனங்களும் ஒரே நேரத்தில் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன.
கடந்த சில வருடங்களாக டிரெஸ்கள், அக்சஸரிஸ்கள், ஷூக்கள், ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் டிவிக்கள், லேப்டாப்கள் என நம் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் என ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் ஆன்லைன் மூலம் விற்கப்பட்டு வருகிறது. அதில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் புகழ் பெற்றவை. வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றிருக்கும் பிளிப்கார்ட் ஆண்டுதோறும் பிக் பில்லியன் டேஸ் என்ற பெயரில், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் பல்வேறு அதிரடி தள்ளுபடிகள், சலுகைகள் அளித்து விற்பனை செய்கின்றனர்.
இந்த ஆண்டு பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனை அக்டோபர் 3ம் தேதி தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. முன்னதாக அக்டோபர் 4 முதல் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது, பிளிப்கார்ட் நிறுவனம் ஆரம்பிக்கும் அதே தேதியில் தொடங்க இருக்கிறது, அமேசான் பிரைம் உறுப்பினர்கள் ஒரு நாள் முன்னதாகவே சலுகைகளை பெறுவார்கள். மேலும் கடந்த ஆண்டைப் போலவே, அமேசான் விற்பனை அக்டோபர் முழுவதும் நடைபெறும் என அறிவித்தது. பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் அக்டோபர் 10 வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.
எப்போதும் போல, வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், கணினிகள், மொபைல் பாகங்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களுக்கு தள்ளுபடி விலை மற்றும் கேஷ்பேக்குகளை இந்த இரண்டு நிறுவனங்களின் விற்பனையின் போது பெற முடியும். ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல், மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ, ஒப்போ ரெனோ 6 ப்ரோ தீபாவளி எடிஷன் மற்றும் ரியல்மி நர்சோ 50 போன்ற புதிய பொங்கலை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் மோட்டோரோலா மற்றும் நோக்கியா போன்ற பிராண்டுகள் புதிய ஸ்மார்ட்-டிவிகளை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்கள் 10% சலுகையை கூடுதலாக பெறுவார்கள்.
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு தேதிகளில் விற்பனையை தொடங்கும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இந்த ஆண்டு எதற்காக ஒரே நேரத்தில் தொடங்குகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலுக்கும் வல்லுநர்கள் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் கடும் பணத்தட்டுப்பாட்டில் உள்ளனர். அதே நேரத்தில் பண்டிகை காலங்கள் என்பதால் இந்த தள்ளுபடி விற்பனையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களும் உள்ளனர்.
இதனால் முதலில் தள்ளுபடி விற்பனையை ஆரம்பிக்கும் நிறுவனங்கள் அதிக லாபம் பெற வாய்ப்புகள் இருப்பதை கருத்தில் கொண்டே இரண்டு நிறுவனங்களும் ஒரே நேரத்தில் போட்டிபோட்டு விற்பனை செய்ய முடிவு எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் என்ன நடக்கும் என்பது விற்பனை தொடங்கிய பின்னர் தான் தெரியவரும். இதனிடையே பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் தங்களது பண்டிகை கால விற்பனைக்கு புதிதாக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது, வெப்சைட்டில் அறிவிப்புகளை வெளியிடுவதில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE