தமிழகத்தில் தற்போது 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. நானும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளரும், மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தடுப்பூசிகள் குறித்து பேச இருக்கிறோம். தமிழக முதல்-அமைச்சரின் கோரிக்கையான வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் என்ற இலக்கை மத்திய அரசு நிறைவேற்றுமானால், இந்த வாரமும் 4-வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. 3 மெகா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் சாரை, சாரையாய் வந்து தடுப்பூசிகள் போட்டுக்கொண்டு, அதை ஒரு தடுப்பூசி திருவிழாவாகவே நடத்தினர். 12 மணிக்கெல்லாம் நிர்ணயித்த இலக்கை கடந்து, தடுப்பூசிகள் போதவில்லை என்ற நிலைதான் ஏற்படுகிறது. யாரையும் கட்டாயப்படுத்தி தடுப்பூசிகள் போட சொல்லவில்லை. அப்படியே சொன்னாலும் அதில் தவறில்லை
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE