Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

16 September 2021

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்



சென்னையில் 40 மனநல நிபுணர்கள் 24 மணி நேரமும் ஆலோசனை வழங்க தயார் நிலையில் உள்ளனர்.

‘நீட்’ தேர்வு பயத்தில் தொடர்ந்து 3 பேர் தற்கொலை செய்து கொண்டநிலையில், மருத்துவ தகவல் மற்றும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த மையத்தைத் தொடங்கிவைத்த பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களிடம் உரையாடுவதற்கு இந்த மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக நீட் தேர்வு எழுதியவர்களின் பட்டியலை பெற்று அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் கட்டுப்பாட்டு அறை மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படும்.

இதற்காக தமிழகம் முழுவதும் 333 மனநல நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 40 மனநல நிபுணர்கள் 24 மணி நேரமும் ஆலோசனை வழங்க தயார் நிலையில் உள்ளனர். முதலில் நீட் தேர்வை 2 முறைக்கு மேல் எழுதியவர்களுக்கு இந்த ஆலோசனை வழங்கப்படும். 15 நாட்களுக்குள் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களையும் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 1,033 எண்ணிக்கையில் உள்ளன. இந்த 108 ஆம்புலன்சஸ் சேவை தொடங்கி 13 ஆண்டுகள் ஆகின்றன.

மெகா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறும் என்று தெரிவித்து இருந்த நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அதை 19ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக தடுப்பூசி மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இந்த மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். 19ஆம் தேதி கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறேன்.

இந்த மெகா தடுப்பூசி முகாமில் 20 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி போட இலக்கு வைத்துள்ளோம். தமிழகத்தில் 52 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 48 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடவில்லை. இந்தியாவில் அதிக அளவில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட மாநிலம் தமிழகம்தான். அதுமட்டுமின்றி 2,623 ஆதரவற்றவர்களுக்கும், 1,754 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில் அது குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த இருக்கிறார். இவ்வாறு கூறினர் அமைச்சர்.


source

https://tamil.news18.com/

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES