Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

16 September 2021

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்புகள் மிக்க பெருமாள் வழிபாடு


புரட்டாசி மாதம் என்றாலே அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் திருவிழாக் கோலம் தான். அதிலும், திருமலையில் புரட்டாசி மாதத்தில் திருமலைவாசனின் பிரம்மோற்ஸவம், கருடசேவை என திருவிழாக்கள் களைக்கட்டும்.

புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமன்று அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதம் எனத் தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது மிகுந்த சிறப்பாகும்.

இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.

புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருக்க வேண்டும் எனச் சாஸ்திரம் கூறுகின்றது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பை தரும். திருப்பதியில் புரட்டாசி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பாகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைத்து விரதமிருந்தால் சனி தோஷம் நீங்கும்.

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES