பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கினால் அதை செயல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் கூறினார்.
தமிழக சட்டசபையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். தீர்மானத்தின் மீது பேசிய விஜயபாஸ்கர், ‛கொரோனாவுக்கான இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு பூர்வாங்க பணியை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் அதன் நோய் எதிர்ப்புத் திறன் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் என்பதால் தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் அரசின் நிலைப்பாடு என்ன?,' எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மத்திய அரசு தடையின்றி தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இரு டோஸ் செலுத்தியவர்களில் ஏதோ ஒருசிலருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டாலும் 97.5 சதவீதம் பேருக்கு மீண்டும் தொற்று உறுதியாகவில்லை.
பூஸ்டர் டோஸ் செலுத்துவது குறித்து மத்திய அரசு ஏற்கனவே ஒரு குழு அமைத்துள்ளது. இந்திய அளவில் பூஸ்டர் டோஸ் தொடர்பான திட்டம் எங்கும் செயல்படுத்தவில்லை. பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கினால் அதை செயல்படுத்தும் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE