படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்தார்.
2011 ஆம் ஆண்டு முதல் மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011-12 ஆம் ஆண்டு முதல் 2019-20 ஆம் ஆண்டு முடிய இதற்காக 6349.63 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இடையில் சில காரணங்களால் மாணவர்களுக்கு தகுந்த நேரத்தில் மடிக்கணிகள் சென்று சேரவில்லை.
தற்போது படிப்படியாக அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்குவதற்கு பூர்வாங்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி ஆண்டு தொடங்கும் 6 மாதத்திற்கு முன்பே மடிக்கணினி வழங்கும் திட்டங்கள் வகுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE