மத்திய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினத்தை குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கவும், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, 'எலக்ட்ரிக்' வாகனங்களை பயன்படுத்துமாறு அனைத்து தரப்பினரையும் அறிவுறுத்தி வருகிறது.இதனால், தனியார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.
மத்திய அரசின், 'எனர்ஜி எபிஷியன்சி' நிறுவனம், மாநில அரசுகளின் நிறுவனங்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்களை வாடகைக்கு வழங்கி வருகிறது.
அரசு உத்தரவு
அந்நிறுவனம், சென்னையில் உள்ள முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் சார்ஜிங் மையம் அமைத்துள்ளது. தனியார் நிறுவனங்களும் அமைத்து வருகின்றன. வாகனங்களை சார்ஜ் செய்ய, ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 11 - 15 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நாட்டில் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரங்களில், 'சார்ஜிங் பாயின்ட்' அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது; அதில் சென்னையும் ஒன்று.
'வீடியோ கான்பரன்ஸ்'
தமிழகத்தில் எலக்ட்ரிக் வாகனம் தொடர்பாக, ஒருங்கிணைப்பு பணிகளை மின் வாரியம் மேற்கொள்கிறது.மத்திய மின் துறை உயரதிகாரிகள், எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையம் அமைக்கும் பணிகள் தொடர்பாக, தமிழக மின் வாரியம் உட்பட பல மாநில அதிகாரிகளுடன் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், 'அடுத்த இரு ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். 'தேசிய நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ., துாரத்துக்கு ஒரு சார்ஜிங் மையமும்; மாநகராட்சி பகுதிகளில் 3 கி.மீ., துாரத்திற்கு ஒரு சார்ஜிங் மையமும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளது
source
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE