Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

18 September 2021

பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு!!! (01.07.2021க்குப் பிறகு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 23.08.2021க்கு இடைப்பட்ட காலத்தில் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.



மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாட்களாக மாற்றப்பட்டது அனைவரும் அறிவீர்கள்👍🏼...


கூடுதல் தெளிவுரையை தலைமை செயலாளர் அவர்கள் (கடித நாள் 17/09/21) வழங்கியுள்ளார்...


01/07/21 முதல் 23/08/21 வரை 270 நாட்கள் விடுப்பு முடித்து பணியில் சேர்ந்துள்ள சகோதரிகள்...
தற்போது மீண்டும் விண்ணப்பித்து கூடுதல் நாட்களை (95) மகப்பேறு விடுப்பாக பெறலாம்...


பணியில் சேர்ந்துள்ள இடைப்பட்ட காலம் பணிக் காலமாக கருத்தப்படும்...


01/7/21 முதல் 23/08/21 வரை மகப்பேறு விடுப்பு முடித்து தேவை காரணமாக பணியில் சேராமல் இதர விடுப்பில் இருந்தால்...
அந்த இதர விடுப்பு காலம் 365 நாட்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பு ஆக கருதலாம்....


தலைமை செயலாளர் அவர்களின் கடிதம் தங்களின் பார்வைக்கு.







No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES