Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

23 September 2021

செப்டம்பர் 23 இன்று சம இரவு நாள் September 23 Equinox (Equal nights)

 September 23 Equinox (Equal nights) 

செப்டம்பர் 23 இன்று சம இரவு நாள்.

வசந்த கால சம இரவு நாள் என்றால் என்ன

சம இரவு நாள் (Equinox) என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினைக் கடப்பது நிகழும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும்.

சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. ஆண்டுதோறும் சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும். சில சமயங்களில் இந்த வசந்த கால சம இரவு நாள் மார்ச் மாதத்தில் 19 அல்லது 20 அல்லது 21 அன்று வரும். அதேபோல் வசந்த கால சம இரவு நாள் செப்டம்பர் மாதத்தில் 23-ம் தேதியில் வரும்.

நிலநடுக்கோட்டிற்கிணையான வட்டப்பாதையில் வலம் வரும் செயற்கைக் கோள்கள், இந்நாட்களில் புவிக்கு பின்புறம் வரும் நேரம் சூரியகிரகணத்தைச் சந்திப்பதால் அந்நேரத்தில் சேமிப்பு மின்கலங்களைப் பயன்படுத்தும்பயனர் தகவல்களை கொடுக்கதாம்.

2021 to 2025 ஆண்டுகளுக்கான வசந்த கால சம இரவு நாள்:

இந்த ஆண்டு 2021-இல் மார்ச் 20 ஆம் தேதியன்று வசந்த காலத்தின் தொடக்கமான சமப் பகலிரவு தினம் (Equinox) நிகழவிருக்கிறது. Equinox என்பது சமமான இரவு என்ற பொருளளிக்கும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்த சொல். ஒரு வருடத்தின் இரு நாட்களில் மட்டுமே இரவும் பகலும் சமமான நேரம் கொண்டவையாக இருக்கும். ஒன்று, வசந்தச் சமப் பகலிரவு நாள் (Spring Equinox). மற்றொன்று, இலையுதிர் சமப் பகலிரவு நாள் (Autumn Equinox). இந்த இலையுதிர் சமப் பகலிரவு நாள் தான் இன்று 2021-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் நாளான இன்று பகலும் இரவும் சரி சமமாக இருக்கும்




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES