தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, தமிழக அரசு தற்போதுள்ள பனைமரங்களை பாதுகாப்பதுடன், கூடுதலாக பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்தது.நடப்பாண்டு, 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும்; ஒரு லட்சம் பனங் கன்று களையும், முழு மானியத்தில் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த பனை மேம்பட்டு இயக்கத்திற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது சபாநாயகர் அப்பாவு, ஒரு லட்சம் பனை விதைகளை வழங்குவதாக உறுதி அளித்தார்.அதன்படி சபாநாயகர், ஒரு லட்சம் பனை விதைகளை முதல்வரிடம் வழங்கினார்.
அவற்றை பெற்றுக் கொண்ட முதல்வர், ஏரிக்கரை, சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களில், பனை விதைகளை நடவு செய்யும், பனை மேம்பாட்டு திட்டத்தை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், துறை செயலர் சமயமூர்த்தி, இயக்குனர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
source
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE