டிஆர்பி போட்டித்தேர்வு மூலம் நடப்பு ஆண்டில் 2,098 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித் துறை முடிவு
டிஆர்பி போட்டித் தேர்வு மூலம் நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறையின் 2021-2022-ம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப் பில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளிப்படையான முறையில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலம் அரசு பள்ளிகளுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வி்த் துறை முன்னுரிமை அளிக்கிறது.
அந்த வகையில், ஏற்கெனவே காலியாக இருந்த பணியிடங்களில் பல்வேறு பாடங்களுக்கு 3,167 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 723 கணினி பயிற்றுநர்கள் (கிரேடு-1) நியமிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பாடங்களில் 4,192 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் கடந்த கல்வி ஆண்டில் (2020-2021) நிரப்பப்பட்டன. மேலும் நடப்பு கல்வி ஆண்டில் (2021-2022) 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
தேர்வு வாரிய முந்தைய அறிவிப்பு
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2,098 முதுகலை பட்டதாரிஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்.11-ம் தேதியேவெளியிட்டது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என்றும், எழுத்துத் தேர்வு ஜுன் 26 மற்றும் 27-ம் தேதி நடத்தப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், இதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நாளான மார்ச் 1-ல் ஆசிரியர் தேர்வு வாரியம்புதிய அறிவிப்பை வெளியிட்டது.
அதில், தொழில்நுட்பக் காரணங்களால் ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தள்ளிவைக்கப்படுவதாக வும், விண்ணப்பப் பதிவு தொடங்கும் தேதி விரைவில் வெளியிடப் படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந் தது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE