தினமலர்..
புதுடில்லி- கொரோனா தொற்றால் ஓராண்டுக்கு மேல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பல குடும்பங்களின் நிலைமை மாறியுள்ளது; அதனால் குழந்தைகள் நலன் கருதி பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டும் என, கல்வித்துறைக்கான பார்லி., நிலைக்குழு தெரிவித்துள்ளது.
கல்வித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு மார்ச் முதல் நாடு முழுதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இது பல குடும்பங்களில் மோசமான நிலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மாணவியரின் கல்விக்கு பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏழை மாணவியர் பலர், வீட்டு வேலைகள் செய்யும் குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர். குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளன. பள்ளிகள் மூடப்பட்டுள்ளது மாணவ - மாணவியருக்கு மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளே குழந்தைகள் முடங்கிக் கிடக்கின்றனர்; இது, பெற்றோர் - குழந்தைகள் உறவையும் பாதித்துள்ளது. அதனால் குழந்தைகள் நலன் கருதி பள்ளிகளை விரைவில் திறக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. ஒரு நாள் விட்டு ஒருநாள், வாரத்தில் மூன்று நாட்கள் என பள்ளிகளை நடத்தலாம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகளுக்கு மாணவ - மாணவியரை வரச் சொல்லலாம். ஏதாதவது ஒரு வகையில் பள்ளிகளை திறப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். அதை விரைவில் செயல்படுத்துவதும் முக்கியம். இவ்வாறு அறிக்கையில் கூறப்படடுள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE