Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

10 August 2021

அரசு ஊழியர்கள் வீட்டு கடன் வரம்பை உயர்த்தி அரசாணை

வீட்டுவசதி வாரிய திட்டத்தில் வீடு வாங்க, அரசு ஊழியர்களுக்கான கடன் முன்பணத்திற்கான உச்சவரம்பை உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வீடு வாங்க, கட்ட, 25 லட்சம் ரூபாய்; அகில இந்திய பணி அலுவலர்களுக்கு, 40 லட்சம் ரூபாய் முன்பணம் கடனாக வழங்கப்படுகிறது. இத்தொகை முறையே, 40 லட்சம், 60 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.இதன்படி, ஊழியர்கள் கடன் பெறுவதற்கான நடைமுறைகள் பிப்., 2ல் வெளியிடப்பட்டன. 

அதில் அரசு ஊழியர்களின், 75 மாத ஊதியம் என்ற வரம்பு, 90 மாத ஊதியம் என்ற அடிப்படையில், கடன் தொகை உச்சவரம்பு முடிவு செய்யப்படும்.இந்நிலையில், வீட்டு வசதி வாரியத்தின், சொந்த வீடு திட்டத்தில் வீடு வாங்கும் போது, கூடுதல் தொகை தேவை. இதை கருத்தில் வைத்து, வீட்டு வசதி வாரிய திட்டத்தில் வீடு வாங்கும் போது, கடன் தொகை உச்ச வரம்பை தளர்த்தி, கூடுதல் தொகையை அனுமதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அரசாணையை வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை பிறப்பித்துள்ளது.

source

https://www.dinamalar.com

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES