பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பொது வினாத்தாள் பாணியில் அலகுத்தேர்வு நடத்தினால் தான், கற்றல் நிலையை அறிந்து, மேம்படுத்த முடியும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து வகுப்புகளுக்கும், மாதவாரியாக நடத்தி முண்டியடிக்க வே பாடத்திட்டங்கள் குறித்த, குறிப்புரை அளிப்பது வழக்கம்.
கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் திறக்காத நிலையில், மாதாந்திர சிலபஸ் வெளியிட்டாலும், ஆன்லைன் வகுப்பு, கல்வி தொலைக்காட்சி என மாணவர்கள் தங்களுக்கு சாத்தியப்பட்ட வகையில், கற்றலை தொடர்வதால், அவர்களின் கல்வி நிலையை மதிப்பிடுவதில் சிக்கல் உள்ளது.மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது. வினாத்தாளை வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து, வீட்டிலே மாணவர்கள் தேர்வெழுதி அனுப்பி வருகின்றனர்.இந்த நடைமுறை, பள்ளிக்கு பள்ளி மாறுபடுகிறது.
சில அரசுப்பள்ளிகளில், அலகுத்தேர்வு நடத்தப்படவில்லை என்ற புகாரும் உள்ளது.அடுத்த மாதம் பள்ளிகளை திறக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மூன்றாவது கொரோனா அலை தீவிரமானால், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் மூடப்படலாம்.இதுபோன்ற இக்கட்டான சூழலில், மாணவர்களின் கற்றல் நிலை உயர்த்த, பள்ளிக்கல்வித்துறை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.கடந்தாண்டை போல, பயிற்சி புத்தகங்கள், வினாவங்கி வெளியிட்டால், மாணவர்கள் பொதுத்தேர்வு தயாராக பயனுள்ளதாக இருக்கும் என்பது, பலரது கருத்தாக உள்ளது.
பெற்றோர் சிலர் கூறுகையில், 'ஏற்கனவே இரு ஆண்டுகளாக, பொதுத்தேர்வு நடக்காத நிலையில், நடப்பாண்டும் தேர்வு ரத்து செய்யப்படலாம் என்ற மனநிலையில், மாணவர்கள் உள்ளனர். அவர்களின் கற்றல் நிலையில், மந்த தன்மை ஏற்படாமல் இருக்க, அவ்வப்போது தேர்வு நடத்துவதே சிறந்த வழிமுறையாக இருக்கும்.மாவட்ட அளவிலாவது பொது வினாத்தாள் தயாரித்து, தேர்வு அட்டவணை வெளியிட்டால், கற்றலில் உள்ள தேக்கநிலையை மாற்றலாம். பள்ளிகள் திறந்தவுடன் இத்தேர்வு நடத்த திட்டமிட வேண்டும்' என்றனர்.
source
https://www.dinamalar.com/
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE