💢பள்ளி, கல்லூரிகள் திறக்கலாமா அல்லது தேதியை ஒத்திவைக்கலாமா என முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
📚தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1ஆம் முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளிகளில் 9,10,11,12ஆம் ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்படுகின்றன
💢இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது தொடர்பாக சுகாதாரத்துறை, காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் இன்று
ஆலோசனை மேற்கொண்டார். பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், பள்ளி, கல்லூரிகள் திறக்கலாமா அல்லது தேதியை ஒத்திவைக்கலாமா என முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், தேதியை ஒத்திவைக்கலாமா என ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த 18ஆம் தேதி பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில், அனைத்து பள்ளிகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டு, சுகாதார வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும். மாணவர்கள் கை கழுவும் வசதி, உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யும் கருவி ஆகியவை பள்ளியில் இடம்பெற வேண்டும். முதல் நாளில் 50 சதவீத மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50 சதவீத மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வர வேண்டும். கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது. பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இதமான சூழல் இருந்தால் மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமர வைத்து பாடம் நடத்தலாம்;பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புவதை தடுக்க வேண்டும். பள்ளிவரும் மாணவர்களுக்கு வைட்டமின் சி மாத்திரை, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் உடல்நிலையை வாரம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
📚இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலையால், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மீண்டும் தடைபட்டது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி முதல், நோய்த் தொற்றுப் பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியது. இருப்பினும், பள்ளிகளில் வகுப்பு நடத்த அனுமதி கிடையாது என்றும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கைக்கான விண்ணப்பிப்பது அல்லது மாற்றுச் சான்றிதழ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE