Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

09 August 2021

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை

தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவரப்படி அரசு நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

கல்வித்துறையில் விவரம் சேகரிப்பு

அதன்படி, நடப்பு கல்வியாண்டில் மாவட்டந்தோறும் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு மாதிரி பள்ளிகள், நகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஒன்றாம் தேதி நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையை வகுப்பு வரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும்

தமிழ் வழி, ஆங்கில வழி பயிலும் மாணவர்களின் விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும

ஆசிரியர்கள் நியமன விவரம்

பள்ளியின் அளவுகோல் பதிவேட்டின்படி, அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களின் விவரங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எத்தனை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற பட்டியல் கிடைக்கும். இதையடுத்து புதிதாக உருவாக்கப்பட வேண்டிய ஆசிரியர் பணியிடங்கள், அவற்றை நிரப்புவதற்கான செயல்பாடுகள் குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முடியும்.

கலைஞர் கனவு திட்டம் ஆகும் கிடப்பில் போடும் எண்ணம் இல்லை

ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?


தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களை பொறுத்தவரை தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கொரோனா நெருக்கடியில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் சூழலில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது தொடர்பாக எப்போது அறிவிப்பு வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் கல்வித்துறையில் மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்கள் சேகரிக்கும் நடவடிக்கையில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது சற்றே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES