தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வருகிற செப் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சுழற்சி முறையில் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றை ஆகஸ்ட் 27 க்குள் சமர்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தடுப்பூசி போடுவது கட்டாயம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றை ஆகஸ்ட் 27 க்குள் சமர்பிக்க வேண்டு என பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE