மாணவர்களே இல்லாத பள்ளிக்கு ஆசிரியர்களை மட்டும் வரவழைத்து ஏதோ வேலை செய்ய வேண்டும் என்பதற்காக ஏதேதோ வேலைகள் கொடுப்பதால்...பள்ளிகளைத் திறந்து விடுவதே மேல் என்கின்றனர் ஆசிரியர்கள்...
புதுடில்லி-'கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள ஆரம்ப பள்ளிகளை திறந்து மாணவர்கள் கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டாக்டர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொற்றுநோயியல் மருத்துவர் சந்திரகாந்த் லஹரியா, இந்திய குழந்தை நல மருத்துவர் கழக முன்னாள் தலைவர் நவீன் தாக்கர் உள்ளிட்ட 56 பேர், பிரதமர் மோடி, மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளனர்
அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மூன்றாவது அலை வரும் என்ற அச்சத்தால், பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் மறுக்கின்றன. ஆனால் பல நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகளுக்கு மாணவர்கள் வருகின்றனர். இந்தியா உட்பட நான்கு அல்லது ஐந்து நாடுகளில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன.
இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த தலைமுறையின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். குழந்தைகளிடையே தீவிர நோய் தாக்கமும், அதனால் ஏற்படும் இறப்பு விகிதமும் மிகக் குறைவாகவே உள்ளது. அதனால், முதலில் ஆரம்பப் பள்ளிகளை திறக்கலாம். மாணவர்கள் தடுப்பூசி போட்ட பின்னர் தான் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE