கொரோனா பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. அதில், கேரளா உள்ளிட்ட தமிழக எல்லையோர மாவட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை மட்டும் தொடரலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சுகாதாரத்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். அதில், தமிழகத்தில் தற்போதைய கொரோனா சூழல், தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தொற்று பரவல் அதிகரித்துள்ள கேரள மாநிலத்தில் இருந்து வருவோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கல்லுரிகள் திறப்பு மற்றும் 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும், எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் விரிவான ஆலோசனை நடைபெற்றது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், அண்டை மாநிலங்களில் பாதிப்புகள் உயர்ந்துகொண்டே வருவதால், அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலை, கேரளா போன்ற மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய நபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பற்றியும், தமிழகத்தில் பாதிப்பை மேலும் குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கலாமா அல்லது தேதி ஒத்திவைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கேரளா உள்ளிட்ட தமிழக எல்லையோர மாவட்டங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை மட்டும் தொடரலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை மறுதினம் முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் உள்ள அனைத்து வகுப்பறைகளும் கிருமி நாசினி மூலம் தூய்மை செய்யப்பட்டு வருகின்றன.
அத்துடன், மாணவர்கள் தனிமனித இடைவெளியுடன் அமரும் வகையில் மேசைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், கல்லூரிகளும் நாளை மறுதினம் திறக்கப்பட உள்ளதால், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE