*தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள்:*
*10 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்:*
*அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை:*
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்து வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் 100 நாட்கள் ஆகப் போகிறது.
அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 13ஆம் தேதி நடப்பு நிதியாண்டிற்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா, புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் எதிர்க்கட்சிகளின் வாய்க்கு பூட்டு போடும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
*பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை*
இந்நிலையில் தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில் குமார் கூறுகையில், 11வது கல்வியாண்டாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் பட்ஜெட்டில் பணிநிரந்தரம் அறிவிப்பு வெளியிடப்படும் என்ற நம்பிக்கையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.
*பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு* :
சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போதே பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதாக திமுக சார்பில் உறுதியளிக்கப்பட்டது.
தேர்தல் அறிக்கையிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
பட்ஜெட்டிலேயே முதல்வர் எங்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
*100வது நாள் அறிவிப்பா!*
பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கேட்டு பலவழிகளில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனாலும் இன்னும் தொகுப்பூதியத்திலே தான் பணியாற்றி வருகிறோம்.
இவ்வாறு பணிபுரிந்து வரும் சூழலில் பலருக்கு 40 முதல் 55 வயது ஆகிவிட்ட சூழலில் வேறு எவ்வித பணிக்கும் செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய ஆசிரியர்களின் வாழ்வாதாரமானது மிகுந்த பாதிப்பில் இருக்கிறது.
எங்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி நிரந்தரம் செய்ய வேண்டும்.
டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது 55 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்தார்.
அதுபோலவே தற்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிரந்தரம் செய்திட வேண்டும் என்றார்.
ஆட்சிக்கு வந்த 100 நாளில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என்பதை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து உள்ளோம் என்று குறிப்பிட்டார்.
தொடர்புக்கு :-
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE