மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகே கல்லூரிக்கு வரவேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகள் அனைத்தும் வரும் செப்.1-ம்தேதி திறக்கப்பட உள்ளன. அதன்படி, அனைத்து வகையான கலை அறிவியல் கல்லூரிகள் பின்பற்றவேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:
மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் இரு தவணை தடுப்பூசிகளையும் கட்டயாம் போட்டுக் கொண்டிருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விவரங்களை அரசு கேட்கும்போது வழங்க ஏற்றவாறு சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும்.
கரோனா சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளில் இணையவழி வகுப்புகளையே தொடர விரைவில் முடிவு செய்யப்படும். பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் கூட்டி பெற்றோர்களின் ஆலோசனையைப் பெற்றிருக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்குக் கல்லூரியிலேயே தடுப்பூசி போட சுகாதாரத் துறை மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும். நோய்த்தொற்று அறிகுறி உள்ள மாணவர்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனை எடுக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வர தேவையில்லை. கல்லூரி வளாகத்தினுள் பயன்படாத பிளாஸ்டிக் கப், தேநீர் கப், டயர்கள், விஷ ஐந்துக்கள் தஞ்சமடையும் இடங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும். நுழைவு வாயில் மற்றும்வெளியேறும் வழிகளில் கண்காணிப்புக் குழு அமைத்து, வழிகாட்டு நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் அனுமதி இல்லைதமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் சுழற்சி முறையில் இயங்கவுள்ளன.
பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பள்ளி வளாகத்தைச் சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களை, வெப்ப பரிசோதனைக்கு பின், வளாகத்தில் அனுமதிக்க வேண்டும். கரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை செய்யவேண்டும். அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 24 மணி நேர கரோனா தடுப்பூசி மையத்தின் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்களை மட்டுமேபள்ளிகளுக்குள் அனுமதிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளுக்குள் அனுமதி இல்லை” என்றார்.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE