செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்டத்தின் புதிய இயக்குனராக, தமிழ் வளர்ச்சித் துறையின் முன்னாள் இயக்குனர்கோ.விசயராகவன் நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனராக பணியாற்றிய கோ.விசயராகவன், கடந்த மாதம் விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதையடுத்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சரவணன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக, முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்ககத்தின் இயக்குனராக பணியாற்றிய தங்க.காமராசு, தமிழ் வளர்ச்சித் துறையின், திருப்பூர் மண்டல துணை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் வகித்த, அகர முதலி திட்ட இயக்ககத்தின் இயக்குனர் பதவிக்கு, தமிழ் வளர்ச்சி துறையின் முன்னாள் இயக்குனர் விசயராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
source
https://www.dinamalar.com/
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE