இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் வாக்குப்பதிவு அலுவலர்களை நியமனம் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடிய பணியாளர்களுக்கு பயிற்சி, தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யும்படி, மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளாட்சி தேர்தலுக்காக திமுகவும், அதிமுகவும் முழு முனைப்புடன் தேர்தல் பணிகளில் களமிறங்கியுள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE