MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளது.
நீட் தேர்வை எழுத கடந்த ஆண்டில் 15,97,435 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
நடப்பு ஆண்டில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை நாடு முழுவதும் 16,14,714 ஆக உயர்ந்துள்ளது.
அதே வேளையில் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வை எழுத கடந்த ஆண்டில் 1,21,617 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,12,890 ஆக சரிந்துள்ளது.
இது தவிர மாநில மொழிகளில் நீட் தேர்வை எழுதுவோர் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது.
குஜராத்தி மொழியில் 49,943 பேரும், வங்க மொழியில் 35,118 பேரும், தமிழில் 19,867 பேரும் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக எண்ணிக்கையான 16.14 லட்சம் பேரில் 9 லட்சத்துக்கும் அதிகமானோர் மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE