பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்பு- தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்
பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் சற்று தணிந்துள்ளது. தொற்று பரவல் குறைந்துள்ளதால், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
அண்மையில் பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை மந்திரி அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது பற்றி பரிசீலனை நடைப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் எனவும் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்வரின் சுதந்திர தின உரையில் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் கூறுகின்றன.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE