தமிழக முதல்வர் அறிவித்தபடி செப் .1 - இல் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளதால் அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்களை நியமிக்க நட வடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். இதற்காக ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு , முதல்வர் அறிவுரைப்படி காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படும்.
இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய வழிகாட்டு முறைகளைப் பின்பற்றுவதில் கவன முடன் செயல்பட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE