Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

01 August 2021

தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு. காரணம் ஏன் தெரியுமா?


தேன்

கொண்டு வந்தவனை பார்த்து நேற்று ஏன்

தேன்

கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்..

ஐயா நீங்கள்

கூறியதை நினைத்

தேன் !

கொல்லிமலைக்கு நடந் தேன்!

பல இடங்களில் அலைந் தேன்!

ஓரிடத்தில் பார்த்

தேன்!

உயரத்தில் பாறைத் தேன்!

எப்படி எடுப்பதென்று மலைத்

தேன்!

கொம்பொன்று ஒடித் தேன்!

ஒருகொடியை பிடித்

தேன் !

ஏறிச்சென்று கலைத்

தேன்!

பாத்திரத்தில் பிழிந்

தேன்!

வீட்டுக்கு வந்

தேன்!

கொண்டு வந்ததை வடித் தேன்!

கண்டுநான் மகிழ்ந் தேன்!

ஆசையால் சிறிது குடித்

தேன் !

மீண்டும் சுவைத் தேன் !

உள்ளம் களித் தேன்!

உடல் களைத் தேன் !

உடனே படுத் தேன்!

கண் அயர்ந் தேன்!

அதனால் மறந் தேன்!

காலையில் கண்விழித் தேன்!

அப்படியே எழுந் தேன்!

உங்களை நினைத் தேன்!

தேனை எடுத் தேன்!

அங்கிருந்து விரைந் தேன்!

வேகமாக நடந் தேன்!

இவ்விடம் சேர்ந் தேன்!

தங்கள் வீட்டை அடைந் தேன்!

உங்களிடம் கொடுத் தேன்!

என் பணியை முடித் தேன்!

என்றார் அதற்கு

தேன்

பெற்றவர்

தேனினும்

இனிமையாக உள்ளது உமது பதில். இதனால் தான் நம் முன்னோர்கள் தமிழை

தமிழ்த் தேன்

என்று உரைத்தனரோ? என கூறி மகிழ்ந் தேன்

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES