வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை, மதுரை, திருவள்ளூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று காலையில் மழை பெய்தது.
டெல்டா மாவட்டங்களில் சில பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்தது. இதுபோல் தர்மபுரியில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு , திருவள்ளூரில் புழல் செங்குன்றம், அலமாதி, கிருஷ்ணகிரியில் போச்சம்பள்ளி, புலியூர், கிருஷ்ணகிரியில் அரசம்பட்டி, செல்லம்பட்டி பகுதிளிலும், சேலத்தில் ஆத்தூரிலும் , புதுச்சேரியில் வில்லியனூர், காலாப்பேட்டை பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ஈரோடு, சேலம் ஆகிய 11 மாவட்டங்களில் 2 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE