நேற்று புதிதாக 1,538 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் 1,753 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் சென்னை, கோவை, செங்கல்பட்டு, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
இதையொட்டி தடுப்பூசி போடும் பணிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் தழுவிய அளவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக முதல்வர்
மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் 50 சதவீதம் என்ற வகையில் சுழற்சி முறையில் அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்களும், ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு 100 தடுப்பூசி போட்டு முடிக்க பணிகள் விரைவுபடுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், அனைத்து பள்ளிகளிலும் தூய்மையான நிகழ்வுகள்-2021 என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்கள், கால அட்டவணை இங்கே வழங்கப்பட்டுள்ளது.
கால அட்டவணை
* செப்டம்பர் 1 - தூய்மை உறுதிமொழி தினம்
* செப்டம்பர் 2 - தூய்மை விழிப்புணர்வு தினம்
* செப்டம்பர் 3 - சமூக விழிப்புணர்வு தினம்
* செப்டம்பர் 4, 5 - பசுமைப் பள்ளி இயக்க நாட்கள்
* செப்டம்பர் 6, 7 - தூய்மை நிகழ்வுகளில் பங்கேற்றல்
* செப்டம்பர் 8 - கைகழுவுதல் தினம்
* செப்டம்பர் 9, 10 - தன் சுத்தம் மற்றும் சுகாதாரம்
* செப்டம்பர் 11, 12 - தூய்மை நிகழ்வு கண்காட்சிகள்
* செப்டம்பர் 15 - பரிசுகள் வழங்குதல்
மேற்குறிப்பிட்ட கால அட்டவணைப்படி அனைத்து பள்ளிகளும் செயல்பட வேண்டும். இதுதொடர்பாக உரிய அறிவுறுத்தல்களை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE