Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

09 August 2021

10,12 ம் வகுப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால் எப்படி பெறுவது






பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் பட்டியல்: பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரியை அணுகவேண்டும். மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது ஆகிய ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105ம், மேல்நிலை பொதுத்தேர்வு (+2) பட்டியல் ரூ.505ம் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள் கால வரையறைக்குள் கிடைக்கும்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.


 

No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES