தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று நடந்தது. இதில் முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் மற்றும் அனைத்து இயக்குநர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பிளஸ் 2 துணைத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம், தனியார் பள்ளிகளின் கட்டணவசூல் விவகாரம், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்குவது உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘கல்வி சார்ந்த பணிகளை தாமதமின்றி துரிதமாக முடிக்கவும், அனைத்துவித பள்ளிகளிலும் அவ்வப்போது ஆய்வுமேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பள்ளி திறப்புக்கான முன்னேற்பாடுகளை முடித்து தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டது. பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் 20-ம் தேதி சென்னையில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அதில், மருத்துவ நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து பள்ளிகள் திறப்பு தொடர்பாக முக்கிய அறிவிப்பை அரசு வெளியிடும்’’ என்று தெரிவித்தனர்
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE