Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

28 July 2021

கொரோனா கட்டுக்குள் வந்த பின், தேர்வு நடத்துவதற்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும். ஆசிரியர் தேர்வு வாரியத்தை, TNPSC உடன் இணைக்கும் திட்டம் இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி



தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை
தமிழ்நாட்டில் 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை முகப்பேர் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் "உயிர்கோள அடர்வனம்" திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவள்ளூவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


அதன் பின்னர் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கல்வி 40 செயலியை தொடங்கி வைத்த அவர், பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறன் வகுப்பறையை திறந்து வைத்தார். பின்னர் உயிர்கோள அடர் வனத்தை பார்வையிட்டு 1000-வது மரக்கன்றை நட்டார். பின்னர் மாணவர்களின் விளையாடு போட்டி சாகசங்களை பார்வையிட்டு மாணவர்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளம். மிக விரைவில் முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி அரசுப்பள்ளிகள் பெருமையின் அடையாளமாக மாறும். நீட் தேர்வை பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழகத்திம் நிலைப்பாடும் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடும். அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்து வரும் நிலையில், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியாரும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தமிழ்நாட்டில் 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.

பிற மாநிலங்களில் உள்ள நிலவரம் பற்றி முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்ற பின், உரிய முடிவு எடுக்கப்படும். பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் தைரியமாக முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

ஆசிரியர் தகுதி தேர்வில் குழுப்பம் உள்ளது என்றும் அதில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.


கொரோனா கட்டுக்குள் வந்த பின், தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்புகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்.ஆசிரியர் தேர்வு வாரியத்தை, TNPSC உடன் இணைக்கும் திட்டம் இல்லை என தெரிவித்த அவர் அம்பத்தூர் பகுதியில் அரசு ஆண்கள் பள்ளி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் விரைவில் அது குறித்து முடிவெடுக்கப்படும்.


source
https://tamil.news18.com/



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES