திருவள்ளூர் மாவட்டம் , அரசு பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டக்கூடாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் நெமிலிச்சேரி கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் எஸ்.ஜோசப் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஜல் ஜீவன்' திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்கும் பணி எங்கள் கிராமத்தில் நடந்துவருகிறது. இதற்காக, இங்குள்ள அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்ட பஞ்சாயத்து தலைவர் முடிவு செய்தார். அதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அவர் ஏற்கவில்லை. ஏற்கனவே அந்த மைதானத்தில் ஒரு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி உள்ளது.
இப்போது கூடுதலாக மற்றொரு மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டினால், மைதானம் சுருங்கிவிடும். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த தொட்டி, சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலைக்கு மிக அருகிலும் கட்டப்படுகிறது. எனவே, பள்ளி மைதானத்தில் நீர்தேக்கத்தொட்டி கட்டத் தடை விதிக்கவேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் டி.வெங்கடாசலம் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ‘பள்ளி வளாகத்துக்கு வெளியில்தான் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. எனவே, பள்ளி மைதானத்துக்குள் நீர்தேக்கத்தொட்டியை கட்டக்கூடாது. இதற்கு தடை விதிக்கிறேன். இந்த வழக்குக்கு தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE