தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்படாவிட்டாலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டது
பிற மாநிலங்கள் பள்ளிகளைத் திறந்து வகுப்புகளைத் தொடங்கிய நிலையில் தமிழ்நாடு அரசும் விரைவில் இது குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளது என்கிறார்கள். கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை இருப்பதால் சிலர் தயக்கம் காட்டுகின்றனர். எனினும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் இயங்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவ்வப்போது ஆலோசனை நடத்துகிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம், பள்ளிகள் திறப்பு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் முடிவெடுப்பார் என கூறினார்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE