தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்க முடியாத சூழல் உள்ளதால், கல்வித் தொலைக்காட்சி வாயிலாகக் கற்பிக்கப்படுகிறது.மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி பார்த்து பாட ஒப்படைப்புகளை செய்வதில் தொய்வு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களின் வீடு,வீடாக நேரில் சென்று மாணவர்களை பாட ஒப்படைப்பு செய்ய வலியுறுத்தினார்கள்.
பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.இப்பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பதால் மாணவர்களிடம் இணைய வசதி மற்றும் ஆண்ட்ராய்டு போன் இல்லாததால் கல்வி தொலைக்காட்சியை மட்டுமே பார்த்து படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மாணவர்களின் கல்வி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாட ஒப்படைப்புகளை அனைவரும் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள்.மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக கற்கும் பாட ஒப்படைப்புகளை அனைவரும் செய்ய வேண்டுமென வீடு வீடாகச் சென்று மாணவர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE