3வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை எந்த அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்?
3வது டோஸ் தடுப்பூசி, கொரோனாவை எதிர்த்து திறம்பட போராட உதவுமா? என்பது குறித்து நிபுணர்கள் பதில் அளித்து உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தியாவில் தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இவ்விரு தடுப்பூசிகளும் 2 டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். கோவேக்சின் தடுப்பூசியின் முதல் டோசை பெற்ற 4 வாரங்களுக்கு பின்னர் 2வது டோஸ் பெற வேண்டும். கோவிஷீல்டு தடுப்பூசி என்றால் அதன் முதல் டோஸ் போட்டு 6 வாரங்கள் முதல், 8 வாரங்களுக்கு பின்னர் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த நிலையில், பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள், தங்களது தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்றுக் கொண்ட பின்னர் ஒரு கூடுதல் டோஸ் (பூஸ்டர் டோஸ்), தேவைப்படலாம்.
அதன் பின்னர் ஆண்டுக்கு ஒரு முறையும் போட்டுக் கொள்ளும் தேவை எழலாம் என கூறின. இதற்கிடையே இந்த மாதத்தின் தொடக்கத்தில், பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாவது டோசை பரிசோதனை அடிப்படையில் தன்னார்வலருக்கு வழங்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை இயக்குநரக நிபுணர் குழு, அனுமதி அளித்தது. 2 டோஸ் எடுத்துக் கொண்டு 6 மாதங்களுக்கு பின்னர் கூடுதலாக ஒரு டோஸ் (பூஸ்டர் டோஸ்) எடுத்துக் கொள்ளலாம் என பாரத் பயோடெக் நிறுவனம் முன்மொழிந்தது.
மற்றொரு நிபுணர் கூறியதாவது:-

எதிர்காலத்தில் வேண்டுமானால் 3வது டோஸ் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கலாம். தற்போது அல்ல. 3வது டோஸ் தடுப்பூசி தேவைக்கான தரவுகள் இல்லை. புளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி போல கொரோனாவுக்கும் ஆண்டுதோறும் தடுப்பூசி தேவைப்படலாம். ஆனால், இப்போதே அதை ஊகிக்க முடியாது. இந்த வைரஸ் புதிதானது. தடுப்பூசி வந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை. எனவே இன்னும் கூடுதல் தரவுகளும், ஆய்வுகளும் தேவை. இவ்வாறு அவர்கள் கூறி உள்ளன
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE