Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

13 July 2021

அமாவாசையில் என்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது?

அமாவாசைக்கு பிறகு வரும் நாட்களை வளர்பிறை நாட்கள் என்று அழைக்கிறோம். எனவே புதிய காரியங்களை வளர்பிறையின் துவக்க நாளிலிருந்து ஆரம்பிப்பது நலமென்று நிறையப்பேர் நம்புகிறார்கள்.

சிலர் அமாவாசை என்பது சந்திரன் இல்லாத நாள் அதாவது பூமிக்கு சந்திரன் தெரியாது அன்று இருட்டாக இருக்கும். எனவே இருட்டு பொழுதில் நற்காரியங்களை செய்யக்கூடாது என்றும் சொல்கிறார்கள். இதில் எது சரி? எது தவறு? என்று முடிவெடுப்பது சிரமமான காரியம்.

இதை ஜோதிட சாஸ்திரம் மற்றும் வானியல் சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும். அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் சந்தி


க்கின்றன. அன்று இவ்விரு கிரகங்களும் ஒரே ராசியில் இருக்கும் அந்த நேரத்தில் இரண்டு கிரகங்களில் ஆகர்ஷண சக்தியும் மிக அதிகமாக இருக்கும். இதனால் மனித மூளையில் துரிதமான மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு நிறைய உண்டு. அதாவது மனம் கொந்தளிப்பான நிலையிலேயே இருக்கும். ஏறக்குறைய கடலை போல.

அமாவாசையில் என்னென்ன செய்யலாம்

அமாவாசையன்று முன்னோர்களை யும், பெரியோர்களையும் வழிபடலாம்.

இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம்.

குலதெய்வத்தை வழிபாடு செய்யலாம்.

அமாவாசையில் என்னென்ன செய்யக்கூடாது?

அமாவாசை அன்று காற்று, வெப்பம் என அனைத்திலும் ஏற்ற, இறக்கம் காணப்படும்.

பொதுவாகவே அமாவாசை, பௌர்ணமி அன்று எந்தவொரு சுபநிகழ்ச்சியையும் செய்ய தயங்குவர். ஏனெனில், இந்த இரண்டு நாட்களில் நம் மனது ஒருவிதமான படபடப்பை ஏற்படுத்தும்.

இதன் காரணமாக அன்றைய தினத்தில் எந்த செயலையும் செய்யாமல் இருந்தால் நல்லது என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.

அமாவாசை அன்று எந்தவொரு கடினமான வேலையையும் செய்யக்கூடாது.

அமாவாசை அன்று பதற்றமாகவோ அல்லது கோபமாகவோ இருக்கக்கூடாது.

அமாவாசை அன்று எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக அமாவாசை அன்று அமைதியாக இறை வழிபாடு மேற்கொள்வது நன்மையை தரும்.

அமாவாசையன்று வாசலில் கோலம் போடக்கூடாது ஏன்?

அமாவாசையன்று, பித்ருக்களுக்கு பிடிக்காத சிலவற்றை நாம் தவிர்க்க வேண்டும். அதாவது கோலம், மணி அடிக்கும் ஒலி, இரும்பு பாத்திரத்தின் ஒலி போன்றவை பித்ருக்களின் வருகையை தடுப்பதாக அமையும் என்பதால் இவை பித்ருக்களுக்கு பிடிக்காது.

ஆகவே, அமாவாசையன்று நம் வீட்டுக்கு பித்ருக்கள் வந்து செல்லும் வரை, அதாவது தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலிலோ, பூஜையறையிலோ கோலம் போடுவதையும், மணியடித்து ஒலி எழுப்புவதையும், தெய்வங்களுக்கு பூஜை செய்வதையும் தவிர்க்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

அமாவாசையன்று முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணம் முடியும் வரை வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பித்ரு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர், வீட்டில் பூஜையறையில் கோலம் போட்டு தீபம் ஏற்றி மணியடித்து தெய்வ பூஜையை வழக்கம்போல் செய்யலாம்.



No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES