தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பிஜியில், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு சில நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகள் மற்றும் பரிசுகளை அறிவித்து வருகின்றன. சில நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் மக்களை தடுப்பூசி போடுவதற்கு வற்புறுத்தி வருகிறது.
இந்நிலையில், 'தடுப்பூசி போடாவிட்டால், வேலை இல்லை' என பிஜி நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து, பிஜி பிரதமர் பிராங்க் பைனிமராமா
கொரோனா தடுப்பூசி போடாவிட்டால், அரசு வேலை இல்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும்.
ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். நவம்பர் மாதம் 1ம் தேதிக்குள் இரண்டாவது டோஸ் செலுத்தப்படாவிட்டால், பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE