இந்த உண்மையை உணர்வதும், தெளிவதுமான அனுபவம் நமக்கு
வாழ்க்கைப் பயணம் ஆகிறது.இத்தகைய சிக்கலை எதிர் கொள்ளவும்
அதில் இருந்து மீளும் வழிவகைகளை நம்முன்னோர்கள் மிகத் தெளிவாகவே வரையறுத்து கூறியிருக்கின்றனர். அப்படிஅவர்கள் அருளிய
மெய்யுணர்வையும், மெய்யறிவையும் அறிந்து தெளிந்து அதன் வழி நிற்பவர்களின் வாழ்க்கைஅர்த்தமுள்ளதாகவும் அனைவருக்கும்
பயனுள்ளதாகவும் ஆகிறது
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு
நேற்று நம்மிடையே இருந்தவன் இன்று இல்லாமல் இறந்து போகும் நிலையாமைதான் இந்த உலகின் பெருமை என்கிறார் வள்ளுவர்.
நிலையாமையை, அதன் குறுகிய காலஅளவை உணர்ந்து நமக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பில் நம்மாலான நல்லவைகளை விரைந்து
செய்வதே நமக்கான கடமை. இதனைசெயல்படுவோர் உணர்ந்து கடைத்தேறுகின்றனர்.
நமது இளமை, உடல், உயிர் ஆகியவை அழியக்கூடியவை. எந்த ஒரு உயிர் மற்றொரு உயிருக்காககாத்திருப்பதில்லை, அதனதன் காலம் வரும்போதுஅவை அழிந்து போகின்றது. அற்புதமான அறிவு,ஆயிரம் சேனைகளும், அளவிட முடியாத செல்வம்என எத்தனை இருந்தாலும் அவை அழியும்இளமையையோ, உடலையோ, உயிரையோ ஒருபோதும் காக்க முடிவதில்லை
எனவே வாழும் காலத்தே இந்த வாய்ப்பின்அருமையை உணர்ந்து செயல்பட வேண்டும் மாறாகசிற்றின்பங்களில் மூழ்கித் திளைத்து வாய்ப்பைவீண்டிப்பதில் அர்த்தமில்லை. மேலும் பருவத்தேபயிர் செய்யாது கடைசி நேரத்தில் வருந்திப் பயனில்லை என்கிறார்கள் நம் சித்தர் பெருமக்கள்.
நிலையில்லாதவைகளை நிலையானது என எண்ணி அதில் மனம் மயங்கி வாழ்க்கையை வீண்டிக்காமல், நிலையான பேரருளை உணர்ந்து தெளிந்து அதன் வழி நிற்பதே சிறப்பு.
No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE