தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விரைவில் திறக்கப்படும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்திக்க நேற்று டெல்லி சென்றார் என்பதும் இன்று அவர் குடியரசுத் தலைவரை சந்தித்து சென்னையில் நடைபெற உள்ள இரண்டு முக்கிய விழாக்களுக்கு வருகை தர அழைப்பு விடுத்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் குடியரசுத் தலைவரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் அவர்கள் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது தமிழகத்தில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு குறித்த கேள்விக்கு அவர் கூறியபோது ’தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இப்போதைக்குத் திறக்கும் சூழ்நிலை இல்லை என்றும் அதனால் இப்போதைக்கு திறக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்
பள்ளிகள் திறப்பது குறித்து ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் மூன்றாவது அலை குறித்து மருத்துவர்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் அதன் பின்னரே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் அவர் தெரிவித்தார். மேலும் அதுவரை வழக்கம்போல் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடைபெறும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
எனவே தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இப்போதைக்கு திறப்பது இல்லை என்பதுதான் உண்மை என்பது தெரியவந்துள்ளது
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பின் பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், "தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது. தொடர் ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும்.
தற்போது பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், மேகதாது அணை கட்டப்பட்டால், அதை எப்படி எதிர்ப்பது என்பதில் முனைப்புடன் இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
THANKYOU FR WATCHING MESSAGE