Breaking


Dear all

Dear all கல்வி சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிய எங்கள் CELL NO: 9444555775 ஐ உங்கள் WhatsApp குழுவில் இணைக்கவும்!

13 July 2021

போராட்ட காலங்களில் மட்டுமல்ல எப்போதுமே ஆசிரியர்களுக்கு விரோதமாக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் தினமலர் நாளிதழுக்கு ஆசிரியர் கூட்டணி கண்டனம்



போராட்ட காலங்களில் மட்டுமல்ல எப்போதுமே ஆசிரியர்களுக்கு விரோதமாக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் தினமலர் நாளிதழுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்ட கிளை சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் விதமாக தவறான கருத்துக்களை இதுவரை பதிவிட்டு வந்த தினமலர் நாளிதழ் தற்போது தமிழக அரசிற்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிண்டு மூட்டும் வேலையை செய்து வருகிறது.

பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களின் செயல்முறை ஆணையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை எடுத்துக் கூறினார்களே தவிர ஆசிரியர்கள் பள்ளிக்கு போகக் கூடாது என்பது சங்கத் தலைவர்களின் நோக்கமோ அல்லது ஆசிரியர்களின் எண்ணமோ அல்ல.

ஆசிரியர்கள் அனைவரும் 2021 ஜூன் 14 ஆம் தேதியில் இருந்து சுழற்சி முறையில் பள்ளிக்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.

2021 - 2022 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் பாடநூல் வழங்குதல் போன்ற நிர்வாக பணிகள் தொடர்ந்து பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.

கற்பித்தல் பணியை செவ்வணே செய்வதே ஆசிரியர்களின் வேலை. அதைச் செய்வதற்காக தானே ஊதியம் பெறுகிறோம். பிறகு ஏன் நாங்கள் பள்ளி செல்ல மாட்டோம் என கூற வேண்டும் .

பல்வேறு ஆசிரியர் சங்க தலைவர்கள் கூறிய கருத்தை நன்றாக படித்து பாருங்கள்

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் பள்ளியை திறக்க வேண்டும் என அனைத்து சங்க நிர்வாகிகளும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள், மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்று சுழற்சி முறையிலாவது பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதுதான் ஆசிரியர் அமைப்புகளின் ஒட்டுமொத்த கருத்து என்பது உங்கள் பத்திரிக்கைக்கு தெரியுமா 

ஏன் இதுபோன்ற நேர்மறையான செய்திகள் எல்லாம் உங்கள் பத்திரிக்கையில் நீங்கள் வெளியிடுவதில்லை.? அல்லது வெளியிட மறுப்பது ஏன்?

தன்னிடத்தில் படிக்கும் மாணவர்கள் தன்னைவிட உயர்ந்த பதவி அடைய வேண்டும் என்று நினைக்கிற எண்ணம் கொண்டவர்கள்தான் ஆசிரியர்கள்.

தன்னை விட உயர்ந்த பதவி அடைந்து விட்டானே என்று பொறாமை எண்ணம் எந்த ஆசிரியர்களுக்கும் ஏற்படுவதில்லை.

ஆசிரியர்களுக்கும் மக்களுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் நாளிதழ் மூலம் நச்சு கருத்துக்களை வெளியிட்டு அதன் மூலம் பொதுமக்கள் மனதில் ஆசிரியர்கள் பற்றிய தவறான கண்ணோட்டத்தை உருவாக்குவதுதான் உங்களுடைய ஒரே குறிக்கோள் என்பது இதன் மூலம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

கொங்குநாடு என்ற தனிமாநில கோரிக்கையை நீங்களாகவே வெளியிட்டீர்கள். உள்ளிட்ட இத்தகைய தமிழகத்தை துண்டாட நினைக்கும் நயவஞ்சக குணத்தை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நம்முடைய மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிக்கையின்படி கொரோனா தொற்றை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஆசிரியர்கள் அனைவரும்மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.

பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக தொடர்ந்து தற்போதுவரை பணிபுரிந்து வருகின்றார்கள்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட தமிழகம் முழுவதும் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேலாக சமூகத்தில் பின்தங்கிய வருமானத்திற்கு வழியின்றி தவிக்கும் ஏழை எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு சேவை மனப்பான்மையுடன் நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் முதலமைச்சர் நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் கொடுத்து உள்ளார்கள் என்பதை ஏன் உங்கள் பத்திரிக்கை பெரிய அளவில் செய்தி வெளியிடவில்லை?



இது போன்று வெளியில் தெரியாமல் எத்தனை ஆசிரியர்கள் தான் பணிபுரியும் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?.

தற்போது நல்லாட்சி கொடுத்துக்

கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக கல்வி தொலைக்காட்சி வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில் மாணவர்களுக்கு

கொரோனா தொற்று பரவாமல் தடுத்து பாதுகாப்பான முறையிலும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது என்பதாவது தங்கள் நாளிதழின் தலைமைக்கு தெரியமா

ஆசிரியர்களின் சம்பளம் பற்றிப் பேசிய தினமலர் நாளிதழ் ஆசிரியரே ! ஒரு ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படும் பொழுது எவ்வளவு ஊதியம் பெறுகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா ?

நீங்கள் குறிப்பிட்டபடி சம்பளம் வாங்குவதற்கு அவர் எத்தனை வருடம் பணி புரிந்திருக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?

இதையெல்லாம் நன்கு அறிந்து தெரிந்து கொண்ட பின்பு உங்கள் பத்திரிகையில் உண்மையான செய்தியை வெளியிடுங்கள். தேவையில்லாமல் ஆசிரியர்கள் மீது வன்மத்தை ஊற்றாதீர்கள்.

மக்களுக்கு போய் சேர வேண்டிய கல்வி சார்ந்த நல்ல செய்திகள் எத்தனையோ உள்ளது. அதையெல்லாம் விட்டுவிட்டு, மக்கள் மனதில் நஞ்சை விதைக்கும் விதமாக தவறான தகவல்களை பரப்பி வரும் தினமலர் நாளிதழுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருநெல்வேலி மாவட்ட கிளையின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் .

மக்கள் மத்தியில் அவதூறை பரப்புவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்

இல்லையென்றால் பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து ஆசிரியர் சங்கங்களும் ஒன்று சேர்ந்து ( ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு உட்பட ) தினமலர் நாளிதழை புறக்கணிப்பதோடு மட்டும்மல்ல அதை தடை செய்வதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் மாண்புமிகு.தமிழக முதலமைச்சர் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்பதையும் கண்டனத்தோடு பதிவு செய்கிறோம்.

தோழமையுடன்..

- செ. பால்ராஜ், மாவட்ட செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி




No comments:

Post a Comment

THANKYOU FR WATCHING MESSAGE

Post Top Ad

Your Ad Spot

EDUCATIONAL WEBSITES